tamilnadu

img

உ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், முதல் வர் ஆதித்யநாத்திற்கும், துணைமுதல்வர் கேசவ்பிரசாத் மவுரியாவுக்கும் இடையே புகைச்சல் ஆரம்பித்துள்ளது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தத் துவங்கியுள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களைபாஜக பெற்றது. எனினும், அந்த 312 எம்எல்ஏ-க்களில் ஒருவரை முதல்வர் ஆக்காமல், அப்போதுகோரக்பூர் எம்.பி.யாக இருந்த ஆதித்யநாத்தை முதல்வராகவும், பூல்பூர் தொகுதி எம்.பி.யாகஇருந்த கேசவ் பிரசாத் மவுரியாவை துணைமுதல்வராகவும் பாஜக நியமித்தது. இவர்கள் தத்தம் பதவியில் தற்போது இரண்டரை ஆண்டுகளை கழித்துவிட்டனர்.

இந்நிலையில்தான், இவர்கள் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன. ஆதித்யநாத்தின் கட்டுப் பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது கேசவ் பிரசாத் மவுரியாவும், மவுரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுப்பணித்துறை மற்றும்சாலைப்பராமரிப்புத் துறை மீது ஆதித்யநாத்தும் ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்.கடந்த அக்டோபர் மாதம் பொதுப்பணித் துறை மற்றும் சாலைப் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒன்றை, முதல்வர் ஆதித்யநாத் நடத்தினார். இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்டதுறையின் அமைச்சரான கேசவ் பிரசாத் மவுரியாகலந்து கொள்ளாத நிலையில், மாநிலத்தில் உள்ளசாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்தும்கூட பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடருமாறு, மாநிலத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் நிற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுப்பணித்துறை, ஊரக மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அளித்துள்ள ஒப்பந்தங்களை தணிக்கை செய்யவும் உத்தரவிட்டார்.இது நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், அண்மையில் துணை முதல்வர் மவுரியா, முதல்வர்ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில், ஆதித்யநாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு கழகத்தில் ஊழல் நடந்துள்ளதாக நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். “உங்களின் கட்டுப்பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டுக் கழகம், வணிக நிலங்களை ஒதுக்கீடுசெய்வதில் ஊழல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் ஊழல் செய்துள்ளது; திட்டம் குறித்தஅறிக்கைகளிலும் போர்ஜரி நடந்துள்ளது; ஆவணங்கள் சில காணாமல் செய்யப்பட்டுள்ளன” என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக் களை முன்வைத்துள்ளார். 

உள்ளூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம்அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மவுரியா,அவர்களில் சுல்தான்பூர் சாலையில் கட்டடம் கட்டும்ஒப்பந்ததாரர் பணத்துடன் தலைமறைவாகி இருக்கிறார்; அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்களை பின்தள்ளி விட்டு, துவங்கி 9 நாட்களேஆன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப் பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.தனது கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறை ஊழல் பற்றி ஆதித்யநாத் பேசியதற்கு பதிலடியாகவே, இவ்வாறு ஆதித்யநாத் துறையில் நடக்கும் ஊழல்களை கேசவ பிரசாத் மவுரியா பட்டியலிட்டுள்ளார். மொத்தத்தில், பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, அக்கட்சியின் முதல்வரும், துணைமுதல்வரும் தங்களுக்குள் இருக்கும்ஈகோவால், அவர்களாகவே வெளியிட்டு வருகின்றனர்.

;